அதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்த கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

0 2283
அதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்தக் கால நீட்டிப்புக் கோரப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்தக் கால நீட்டிப்புக் கோரப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்த சான்றிதழ்களை அளிக்கும் வரை சட்டமன்றத் தேர்தலை நடத்தத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் 2 ஆண்டுகளாக உட்கட்சித் தேர்தல் நடத்தாததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உட்கட்சித் தேர்தல் நடத்தும்படி அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், கொரோனாவைக் காரணம் காட்டி உட்கட்சித் தேர்தல் நடத்த அதிமுக சார்பில் கால நீட்டிப்புக் கோரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments