"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கனிம வள கொள்ளை.. திருட்டு நடைபெற்ற பின்பு அபராதம் விதிப்பதா? - உயர்நீதிமன்ற கிளை கேள்வி
கனிம வள கொள்ளையை பொருத்தவரை திருட்டு நடைபெற்ற பின்பு அபராதம் விதிப்பதா? இல்லை திருட்டு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் தாக்கல் செய்த மனுவில், ஜெயபிரகாஷ் என்பவர் சட்டவிரோதமாக குவாரி உரிமம் பெற்று, சொடையூர் கண்மாய் பகுதியில் மணல் அள்ளுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் நிலத்தடி நீர் குறைவதுடன் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குவாரி நடத்துவதற்கான 21 பொது விதிகளும், அனுமதி வழங்குவதற்கான 4 விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
Comments