பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு..!
பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவில், அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவை அடங்கிய நினைவிடம் அமைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி திறக்கப்பட்ட நினைவிடம், பராமரிப்பு பணிக்காக பிப்ரவரி 2-ஆம் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்கள் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
Comments