இந்தியாவில் இருந்து 84 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி - அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

0 1518
இந்தியாவில் இருந்து 84 நாடுகளுக்கு 6 கோடியே 45 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து 84 நாடுகளுக்கு 6 கோடியே 45 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவத்துறைப் பணியாளர்கள் 89 லட்சம் பேர் முதல் தடுப்பூசியும், 54 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்களப் பணியாளர்கள் 98 லட்சம் பேர் முதல் தடுப்பூசியும், 45 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 9 கோடியே 43 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments