விண்வெளி சுற்றுச்சூழல் குறித்த ஆய்விற்காக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சீனாவின் செயற்கைக்கோள்
விண்வெளியின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வதற்கான சோதனை செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஷாங்க்சி மாகாணத்திலுள்ள தையுவான் செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து வெள்ளியன்று காலை செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள், அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த சோதனைகளை மேற்கொள்ளவும் இது பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் Long march ராக்கெட் வரிசையில் 365-வதாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments