புதுச்சேரியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அறிவித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்

0 1793
புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள், மால் திரையரங்குகள், மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அங்கு அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ள் நிலையில் கொரானா பரவலை கட்டுப்படுத்த திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய தடை, ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வரும் 11ந்தேதி முதல் 14ந்தேதி வரை கோவிட் தடுப்பூசி திருவிழா நடத்தவும் மாநில சுகாதாரத்துறைக்கு தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments