திடீரென தீப்பிடித்த ஆம்னி கார்.. கால் எலும்பு முறிவால் தப்பிக்க வழியின்றி காரோடு எரிந்து கருகிய நோயாளி

0 5079
திருப்பூர் அருகே ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததில் மருத்துவமனையிலிருந்து அழைத்து வரப்பட்ட நோயாளி உடல் கருகி உயிரிழந்தார்.

திருப்பூர் அருகே ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததில் மருத்துவமனையிலிருந்து அழைத்து வரப்பட்ட நோயாளி உடல் கருகி உயிரிழந்தார்.

துடுப்பதியைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஓரளவு குணமடைந்த நிலையில், நேற்றிரவு அவரது மனைவி ஜோதிமணியும் உறவினர் ராஜா என்பவரும் மருத்துவமனையிலிருந்து ஆம்னி காரில் ரங்கராஜனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

பெருமாநல்லூர் அருகே காரை நிறுத்திவிட்டு இருவரும் இயற்கை உபாதை கழிக்கச் சென்றதாகவும் பின்னர் வந்து காரை எடுக்கும்போது அது தீப்பற்றியதாகவும் ராஜாவும் ஜோதிமணியும் கூறுகின்றனர்.

நடக்கமுடியாமல் பின் சீட்டில் படுத்திருந்த ரங்கராஜனை வெளியே தூக்க முடியாமல் விட்டுவிட்டதாக அவர்கள் கூறும் நிலையில், கரோடு சேர்ந்து எரிந்து கருகி ரங்கராஜன் பரிதாபமாக பலியாகியுள்ளார். இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments