பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு 16ந் தேதி தொடக்கம்

0 4032

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில், ஆய்வகங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும், ஆய்வகம், ஆய்வகப் பொருட்களை கிருமிநாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், மாணவர்கள் கிருமிநாசினி பயன்படுத்திய உடனேயே, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது, கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனைசெய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 இதனிடையே, திட்டமிட்டபடி மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments