ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்

0 1783

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 3 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், அதன் மூலம் இன்னும் இரு தினங்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்த விவரங்களை உடனடியாக மத்திய அரசுக்குத் தெரிவித்து தேவையான அளவு தடுப்பூசி மருந்தை வாங்கி வைக்குமாறு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments