பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி
சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கோலார் டவுன் குருபரபேட்டை பகுதியைச் சேர்ந்த சைத்ரா கொட்டூர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஆவார். சின்னத்திரை தொடர்களிலும் இவர் நடித்து வந்தார். நாகார்ஜூன் என்பவரைக் காதலித்து மணந்த சைத்ரா, கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவரது காதல் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
Comments