இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவணே வங்கதேசம் பயணம்

0 8196

ராணுவத் தளபதி நரவனே, 5 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்துக்கு சென்றார்.

அந்நாட்டின் ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார். மேலும் 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போரில் உயிர் நீத்த வங்காளதேச ராணுவ வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து  ராணுவ நிலையங்களுக்கு செல்லும் நரவணே கூட்டு ராணுவ பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். இரு நாட்டு ராணுவத்துக்கிடையிலான நெருங்கிய உறவை அவரது இந்த பயணம் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments