முழு ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்
பல்வேறு மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு மீண்டும் வரலாம் என்ற அச்சத்தால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் திரண்டுள்ளனர்.
மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். கடந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ரயில்கள், பேருந்துகள் நிறுத்தப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உணவும் குடிநீரும் இல்லாமல் குழந்தைகளுடன் தங்கள் ஊர்களை நோக்கி நடந்து சென்ற கொடுமை நிகழ்ந்தது.
மீண்டும் அது போல ஒரு சூழல் வரும் என்ற அச்சத்தில் பலர் இப்போதே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டனர்.
Comments