இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று 11வது கட்டப் பேச்சுவார்த்தை
இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் தலைமையிலான 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று இந்திய எல்லைக்குட்பட்ட சுல்சுல் ( chulchul) பகுதியில் நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் லடாக்கில் மேலும் படைகளைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியா சீனா இடையே ஏற்கனவே நடைபெற்ற பத்து சுற்று அமைதிப் பேச்சுகளின் பயனாக பாங்-காங் ஏரிப் பகுதியில் இருந்து படைகளை சீனா திரும்பப் பெற்றுக் கொண்டது.
இரு தரப்பிலிருந்து பீரங்கிகள், படைவீரர்கள் திரும்பப்பெறப்பட்டன. இதனால் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த பதற்றமான நிலை தணிந்தது.ஆயினும் இன்னும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், தேப்சாங் ஆகிய மலைப்பகுதிகளில் உள்ள சீனப்படைகள் திரும்பப்பெறவில்லை.
இன்றைய பேச்சுவார்த்தை இதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments