கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் சச்சின் டெண்டுல்கர்

0 3261
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த 27ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. முதலில், தனது இல்லத்தில் சுய தனிமைப்படுத்திக் கொண்ட சச்சின் டெண்டுல்கர், கடந்த 2ஆம் தேதி மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்த அவர், வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். கடந்த ஓர் ஆண்டாக, கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள மருத்துவர்கள்  உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments