வாரத்துக்கு 40 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து தேவை - மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிரத்துக்கு வாரத்துக்கு 40 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் தேவைப்படுவதாக மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளரிடம் பேசிய அவர், மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், அரியானா மாநிலங்களைவிடக் குறைந்த அளவு தடுப்பு மருந்துகளே வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 6 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டு வருவதால் வாரத்துக்கு 40 லட்சம் தடுப்பு மருந்துகள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
Comments