"புதிய கல்விக்கொள்கை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்"-சென்னை ஐ.ஐ.டி இயக்குநர்
புதிய கல்விக் கொள்கை, மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.
சென்னை பல்கலைக்கழக 163ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 872 பேருக்கு நேரிலும், 1,36,873 பேருக்கு அந்தந்த கல்லூரிகள், தபால் மூலம் என்று மொத்தம் 1,37,745 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் காட்டிய பின்னரே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Comments