மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தெருக்களை மூட உத்தரவு
மதுரையில் மாநகராட்சியின் உத்தரவை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் அடைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பரிசோதனை முகாமை அதிகரிக்கவும், மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவுவதை தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களை அடைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குடி, கே.கே.நகர், திருப்பாலை, சம்பங்குளம், டெப்டி கலெக்டர் காலனி உள்ளிட்ட 18 பகுதிகளில் அதிகம் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பகுதிகள் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தகரம், பேரிகார்டு உள்ளிட்டவை வைத்து அடைக்கப்படுகிறது. இதனிடையே, மதுரை தெற்கு மாசி வீதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Comments