சுங்க சாவடி கட்டணங்கள் நியாயமாக இல்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

0 4624
சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்க சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019ல் முடிவடைந்து விட்டது. ஆனாலும் அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு  தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கபடுவதால் அதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பாஸ்டேக் முறை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments