நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பேட்டை செந்தமிழ் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கும், பாளையங்கோட்டை, பெருமாள்புரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments