உச்சநீதிமன்றத் புதிய தலைமை நீதிபதியின் பெயர் அறிவிப்புக்குப் பிறகு வழக்கத்திற்கு மாறாக கொலிஜீயம் கூட்டத்தைக் கூட்டினார் நீதிபதி போப்டே
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்து அறிவித்த பின்னர் வழக்கத்திற்கு மாறாக தலைமை நீதிபதி போப்டே கொலிஜீயம் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
பொதுவாக புதிய தலைமை நீதிபதியின் பெயரை குடியரசுத் தலைவர் அறிவித்த பின்னர் கொலிஜீயம் கூட்டங்களை தலைமை நீதிபதி கூட்டுவதை தவிர்ப்பது வழக்கம். அதேபோன்று அனைத்து கோப்புகளும் கொலிஜீயம் நடைமுறைகளும் புதிய நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.
இந்நிலையில், கொலிஜீயம் கூட்டத்தை தலைமை நீதிபதி போப்டே இன்று கூட்டியுள்ளார். ஆயினும் இன்றைய கொலிஜீயம் கூட்டத்தில் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டால் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போப்டேவின் பதவிக்காலம் வரும் 23ம் தேதி நிறைவு பெறுவதால், புதிய நீதிபதி ரமணா 24ம் தேதி பதவியேற்கிறார்.
Comments