எங்கள் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை - உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்
தங்கள் நாட்டில் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதால் அதன் பொருளாதார நட்பு நாடான வடகொரியாவிலும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்புக்கான வடகொரிய பிரதிநிதி எட்வின் சால்வடோர் வழங்கியுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட 23 ஆயிரம் பேரை பரிசோதித்ததாகவும், அனைவரும் தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொற்று நோயைத் தவிர்க்கவே ஜப்பான் ஒலிம்பிக் போட்டியைத் தவிர்ப்பதாகவும் வடகொரியா கூறியுள்ளது.
Comments