அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 105 காசுகள் சரிவு

0 23086
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 105 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரேநாளில் 105 காசுகள் சரிந்து 74 ரூபாய் 47 காசுகளாக உள்ளது.

வங்கிகளின் வட்டி விகிதம் பற்றிய கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்  வெளியிட்டார். அதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி, ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள இருப்புத் தொகைக்கான வட்டி விகிதம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தார்.

எனினும் கொரோனா பரவல் அதிகரிப்பு, பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பு ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிக நேரத் தொடக்கத்தில் 73 ரூபாய் 42 காசுகளாக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, வணிக நேர முடிவில் 74 ரூபாய் 47 காசுகளாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments