காதல் மனைவியை பிரிந்த விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற கணவருக்கு கத்திகுத்து... மச்சானை தேடி வரும் காவல்துறை!

0 15470

ஆண்டிபட்டி அருகே காதல் மனைவியை பிரிந்த விரக்தியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு மருத்துவமனையில் கத்தி குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி என்பவரின் மகன் 25 வயதாகும் வேல்முருகன் . இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 

வேல்முருகன் நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சினி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மார்ச் 22-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு கரூரில் வீடு ஒன்றை வாடைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இது குறிப்பு ரஞ்சனியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து வேல் முருகன் - ரஞ்சனி தம்பதியினரை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெற்றோரின் வற்புறுத்தலால், இருவரும் பிரிந்து அவரவர் குடும்பத்தினருடன் சென்றனர்
 
இதனையடுத்து, தனது காதல் மனைவியை பிரிந்த விரக்தியில் வேல்முருகன் நாச்சியார்புரம் அருகே உள்ள கண்மாயில் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

வேல்முருகனை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகனை தனது காதல் மனைவி ரஞ்சனியின் சகோதரர் விஜய் நலம் விசாரிப்பது போல் பார்க்கச் சென்றார். 

அப்போது திடீரென விஜய் அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதையடுத்து படுகாயமடைந்து வலியால் துடித்த வேல்முருகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கானா விளக்கு போலீஸார், தனிப்படை அமைத்து தப்பியோடிய விஜயை தீவிரமாக தேடி வருகின்றனர் .

மருத்துவமனை வளாகத்திலேயே நோயாளிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் சக நோயாளிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments