கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

0 4701

கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 8 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அவர் விரிவாக கேட்டு அறிவார் என்றும், இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவிப்புகளையும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments