"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
செவ்வாய் கிரகத்தில் வானவில்லா.? வைரலான புகைப்படத்திற்கு நாசா விளக்கம் !
செவ்வாய் கிரகத்தில் வானவில் உருவானது போன்று வெளியான புகைப்படங்கள் குறித்து நாசா விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவால், கடந்த மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட பெர்சிவரென்ஸ் (perseverance)ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் வானவில் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் ஆச்சரியபடுத்தியது.
இயற்கையாக மழை மற்றும் வெயில் அடிக்கும் போது தோன்றும் வானவில், செவ்வாயில் எப்படி தோன்றியது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். செவ்வாயில் வானவில் ஏற்பட வாய்ப்பில்லை என விளக்கமளித்துள்ள நாசா, அது கேமராவின் லென்ஸ் விரிவடையும்போது ஒளிக்கதிர்கள் லென்ஸின்மீது படுவதால் ஏற்படும் ஒளி என விளக்கமளித்துள்ளது.
Comments