வாக்கு எண்ணும் மையங்களை விழிப்புணர்வுடன் கண்காணிக்க அதிமுகவினருக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்

0 4415

சட்டமன்ற தேர்தல் நிறைவுப்பெற்றுள்ள நிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையங்களை மிகுந்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என கட்சியினருக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் முழு ஒத்துழைப்பு வழங்கிய அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள், முகவர்கள்,  தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினர் கவனக்குறைவாக இருந்திடாமல், இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments