மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை - மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கவலை
மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது இருப்பில் உள்ள 14 லட்சம் தடுப்பூசி டோசுகள் 3 நாட்களுக்கு மட்டுமே வரும் என்பதால் கூடுதல் எண்ணிக்கையிலான தடுப்பூசியை உடனே அனுப்பித் தருமாறு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மும்பை மாநகரில் தடுப்பூசி இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஒரு லட்சம் கோவிஷீல்டு டோசுகள் மட்டுமே உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி இருப்பு இல்லாததால் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு, அங்கு வருபவர்கள் திருப்பி அனுப்ப ப்படுவதாகவும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments