தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி

0 11094
தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. முதலமைச்சர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகளும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போட்டியிட்ட போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகளும், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் 74.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகளும்,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 58.41 சதவீத வாக்குகளும், பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

imageimageimageimageimageimage

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments