ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்

0 2470
சென்னை தாம்பரத்தில் ரயில் பயணி ஒருவர் தவற விட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.

சென்னை தாம்பரத்தில் ரயில் பயணி ஒருவர் தவற விட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் நாகர்கோயிலில் இருந்து தாம்பரம் வரை பயணித்த மதிகிருஷ்ணன் என்பவர் தாம்பரத்தில் இறங்கும் போது தங்க நகைகள் அடங்கிய பையை எடுக்க மறந்து விட்டார்.

இன்று அதிகாலை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அது குறித்து புகார் அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் குறிப்பிட்ட ரயிலில் சோதனை நடத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் நகை அடங்கிய பையை கண்டெடுத்து சம்பந்தப்பட்ட பயணியிடம் ஒப்படைத்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையினரின் இந்த வேகமான நடவடிக்கை பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments