யார் யாருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் ? - சுகாதார அமைச்சகம் விளக்கம்

0 4568

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்பதுடன் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்பதற்காக போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனைவருக்கும் ஏன் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவில்லை என அரசை நோக்கி பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு சுகாதார அமைச்சகம் பதிலளித்துள்ளது. கொரோனா மரணங்களை தடுக்க வேண்டும், சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் தடுப்பூசியை போட முடியாது என சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments