கல்விக்காக உதவிக்கோரிய கல்லூரி மாணவி : உடனே ரூ.1 லட்சம் வழங்கிய காஜல் அகர்வால்
ட்விட்டரில் கல்விக்காக உதவிக்கோரிய கல்லூரி மாணவிக்கு உடனே உதவிக்கரம் நீட்டிய காஜல் அகர்வாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், தற்போது தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனது கல்லூரி தேர்வு கட்டணத்தை செலுத்த 83 ஆயிரம் ரூபாய் தேவை என ட்விட்டர் வாயிலாக காஜல் அகர்வாலிடம் உதவி கேட்டிருந்தார்.
உடனடியாக தனது உதவியாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்பு கொண்ட காஜல் அகர்வால், அவரது வங்கிக்கணக்கு விவரங்களை கேட்டறிந்து ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினார்.
Comments