ரேடார் குளறுபடியால் கட்டுமான பணிகள் நடைபெறும் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்
சாம்பியாவில் திடீர் தொழில்நுட்ப குளறுபடியால் கட்டுமான பணி நடந்து கொண்டு வரும் விமான நிலையத்தில் தவறுதலாக சரக்கு விமானம் தரையிறங்கிய சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் புதிய விமான நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் எத்தியோப்பியாவில் இருந்து சாம்பியாவின் மற்றொரு விமான நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் ரேடாரில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தவறுதலாக கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கும் விமான நிலையத்தில் தரையிறங்கியது. தவறை உணர்ந்த அதிகாரிகள் விமானத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்தனர்.
Comments