மயிலாடுதுறையில் விவிபாட் இயந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் அந்தந்த மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு முடிந்து சீல்வைக்கப்பட்டு வேனில் ஏற்றிய பின்னர் விவிபாட் எந்திரத்தின் சீலை அகற்றியதற்கு முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கோடை வெயில் வெளுத்து வாங்கியதால் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல்வைக்கும்போது தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜபாளையம் என்பதைக் குறிக்கும் வகையில் ஆர் என்ற எழுத்தை சீல்வைக்கும்போது, அது ராஜேந்திரபாலாஜியைக் குறிக்கும் எனக் கூறி தி.முக.வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆவடி திருமுல்லைவாயலில் வாக்கு மையத்தில் 50 வாக்காளர் அடையாள அட்டைகளை நிலை அலுவலர் ஒருவர் வைத்திருந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணையில், ஆசிரியையான அவர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை ஏற்கனவே மேற்கொண்டிருந்ததாகவும் தவறான முகவரி உடையவர்களின் வாக்காளர் அட்டைகளை திரும்பி ஒப்படைக்க வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விவிபாட் எந்திரத்தின் பாட்டரியை கழற்ற மறந்துவிட்டதாகவும், அதனால் சீல் உடைக்கப்பட்டததாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் சமாதானம் செய்தபின் முகவர்கள் கலைந்து சென்றனர்.
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு எந்திரங்களுக்கு சீல்வைக்க தாமதம் ஆனதற்கு அ.ம.மு.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மண்டல அலுவலரை வரவைத்து சீல் வைக்கும் பணி முடிவுற்றதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments