வாக்குச்சாவடிக்கு WALK செய்தே வந்த 105 வயது முதியவர்.... 1952ல இருந்து ஓட்டு போடுறேன்!

0 5445

கோவை அருகே சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த 105 வயது முதியவரிடம், தேர்தல் அதிகாரிகள் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையம் பகுதியை சேர்ந்தவர், மாரப்ப கவுண்டர். இவர் 1916 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு வயது 105. விவசாயி ஆன இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் மற்றும் 8 பேரன் , பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி, மாரப்ப கவுண்டர் தனது வீட்டில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி தூரம் தனியே நடந்தே சென்று, தனது வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது, 105 வயது நபர் வாக்களித்து செல்வதாக வாக்கு சாவடியில் நின்று கொண்டிருந்தவர்கள் தெரிவித்ததை கேட்டு அங்கு பணியில் இருந்தவர்கள், மாரப்ப கவுண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடந்த 1952ஆம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருவதாக கூறினார்.

காமராஜர், காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளை தான் நேரடியாக பார்த்துள்ளதாக தெரிவித்தார் மாரப்ப கவுண்டர். வாக்களிக்க வந்த முதியவரிடம் தேர்தல் அதிகாரிகள் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments