தமிழ்நாட்டில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 4795

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 3,645 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்றவர்களில், 1809 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அது பலனின்றி, 15 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில் 1303 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 304 பேரும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் 281 பேரும், திருவள்ளூரில் 165 பேரும், காஞ்சிபுரத்தில் 137 பேரும், தஞ்சாவூரில் மேலும் 121 பேரும், மதுரை மாவட்டத்தில் 120 பேரும், திருச்சியில் 117 பேரும் புதிதாக, பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 19 பேருக்கும், ஆந்திரா மற்றும் பீகாரில் இருந்து வந்த தலா 5 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments