கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அமைதியாக நடைபெற்றது வாக்குப்பதிவு

0 3862

கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் வரிசையில் வந்து வாக்களித்தனர். மத்திய இணை அமைச்சர் முரளிதரன், காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளிட்டோர் திருவனந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் மம்முட்டி எர்ணாகுளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மாலை ஐந்தரை மணி நிலவரப்படி கேரளாவில் 69.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 957 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்ர். ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா என்பது மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments