பணிக்கு வந்த இடத்தில் மாரடைப்பு... வாக்குச்சாவடியிலேயே தேர்தல் அலுவலர் உயிரிழப்பு!

0 51966

திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே, திருவேகம்பத்தூரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் வாராப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்ற திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காரையூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலராக ரஜினிகாந்த் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

நேற்று இரவு முதல் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதனால் , அவரால் காலையில் தேர்தல் பணிக்குச் செல்ல இயலவில்லை என கூறப்படுகிறது.

உடனடியாக காரையூர் வாக்கு சாவடி மையத்திற்கு , மாற்று அதிகாரி நியமிக்கப்பட்டு தேர்தல் பணி தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் பள்ளியிலேயே தங்கி இருந்த ரஜினிகாந்த்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தேர்தல் பணி செய்ய வந்த இடத்தில் அதிகாரி ஒருவர், உயிரிழிந்ததால் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டவராயன்பட்டி காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments