சென்னையில் 2 வாக்குச் சாவடிகளில் விவிபேட் கருவியில் கோளாறு
சென்னையில் இரு வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் விவிபேட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மந்தைவெளி சைதன்யா பள்ளியில், வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவிபேடில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் 45 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, புதிய விவி பேட் கொண்டுவரப்பட்டது. இதேபோல் வேளச்சேரி தொகுதிகுட்பட்ட அடையாறு வெங்கடேஸ்வரா தெருவில் பெண்கள் மட்டுமே வாக்களிக்க அமைக்கப்பட்டிருக்கும் 154 ஆவது பிங்க் வாக்குப்பதிவு மையத்திலும் விவி பேட் வேலை செய்யாததால் வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.
Comments