கொரோனா பரவல் எதிரொலி..! மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக் குழு விரைவு
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்களுக்கு 50 உயர்மட்ட பொது சுகாதாரக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்மட்ட பொது சுகாதாரக் குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளது.
கொரோனா பரவல் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக மகாராஷ்டிராவின் 30 மாவட்டங்களுக்கும், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாபில் உள்ள 9 மாவட்டங்களுக்கும் சுகாதாரக் குழுக்கள் விரைந்துள்ளன.
இதில் ஒரு மருத்துவர் அல்லது தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றுள்ளனர்.
Comments