அந்த 9 காதலிகளும் ஒரு காதல் ஜீரோவும்..! வீட்டில் ரன்னர்..! வெளியில் கண்ணீர்..!

0 6630

9 பெண்களை காதல்வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிய மோசடி ஆசாமி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். காதல் மோகத்தில் வீட்டை விட்டு வெளியேறி ,காதலனை நம்பிச்சென்றவர்கள் கண்ணீரில் தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

அருண்குமார் தங்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் தொழிலிலுக்கு விற்றுவிட்டதாக ஆந்திரா மகளிர் ஆணையத்தில் அவனது இரு மனைவிகளும் புகார் தெரிவித்தனர். விசாகப்பட்டினம் காவல்துறையினர் காதல் ஜீரோ அருண்குமார் என்பவனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அருண்குமார் தன்னை ஒரு காதல் நாயகன் போல காட்டிக் கொண்டு மொத்த 9 பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில நாட்களிலேயே அவர்களை பாலியல் தொழிலில் தள்ளுவதையும், செல்ல விரும்பாதவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற கொடுமைகளையும் செய்தது அம்பலமானது.

9 பெண்களை திருமணம் செய்திருந்தாலும் ஏராளமான பெண்களை திருமணம் செய்து கொள்ளாமலேயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கும்பலுடன் உள்ள தொடர்பால் எப்போதும் கையில் துப்பாக்கி சகிதம் சினிமா தாதா போல வலம் வந்துள்ளான்.

மேலும் தன்னிடம் இருந்து தப்பிய பெண்கள் தன் மீது போலீசில் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கையில் பெரிய அரிவாள் கத்தி ,கபடா, சைக்கிள் செயின், இரும்பு பைப் போன்றவற்றை காண்பித்து மிரட்டுவதையும், அவர்களை அடித்து காயப்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூட்டாளி ஒருவரை கொலையும் செய்துள்ள அருண்குமாரின் குடியிருப்பில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவனால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்

ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மகளிர் ஆணையத்தின் தலையீட்டால் உடனடியாக காதல் ஜீரோ அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர் . பாதிக்கப்பட்ட பெண்களில் கணவனை விட்டு பிரிந்து அருண்குமாரை நம்பி வந்தவர்களும் அடக்கம் என்று கூறப்படுகின்றது.

காதலிக்கும் நபர்களின் பின்னணி தெரியாமல் சினிமா வசனத்தில் மயங்கி காதலன் பின்னால் செல்லும் பெண்களுக்கு என்ன மாதிரியான அபாயம் காத்திருக்கின்றது என்பதற்கு இந்த போலி காதலனே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments