”அசாமில் கொரோனா இல்லாததால் யாரும் முககவசம் அணிய தேவையில்லை”: அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறிய கருத்தால் சர்ச்சை

0 2625

அசாமில் கொரோனா பாதிப்பு இல்லாததால் யாரும் முக கவசம் அணிய தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நிருபர் ஒருவரிடம் பேசிய அவர், தேவை ஏற்பட்டால் முக கவசம் அணிவது குறித்து  தகவல் தெரிவிப்பேன் என்றும், அனைவரும் முக கவசம் அணிந்தால் அழகு நிலையமெல்லாம் எப்படி செயல்படும் என்றும், அடுத்தடுத்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கு டுவிட்டரில் பதில் கருத்து பதிவிட்ட சர்மா, தனது கருத்தை கிண்டலடிப்பவர்கள், டெல்லி, மகாராஷ்டிராவை காட்டிலும், அசாமில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்பதை வந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments