மும்பையில் அதிகரிக்கும் கொரோனா: ஐ.பி.எல்-ல் பங்கேற்கும் அணிகள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி!

0 4098

மும்பையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி மேற்கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக, மும்பை உள்பட மகாராஷ்டிரா முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.  இதையடுத்து ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, இரவு 8 மணிக்குப் பிறகும், ஐபிஎல் அணிகள் வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 முதல் இரவு 10 மணி வரை இரண்டு பிரிவாக பயிற்சி மேற்கொள்ள ஐபிஎல் அணிகள் திட்டமிட்டுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 9 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் மட்டும் 10 போட்டிகள் நடைபெற்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments