ரபேல் ஒப்பந்தத்தைப் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 36 ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற, டசால்ட் நிறுவனம் இடைத்தரகருக்கு சுமார் ஒன்பதரை கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த புகார் ஆதாரமற்றது என்றார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
Comments