தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3290

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 ஆயிரத்து 672 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஓமனில் இருந்து வந்த 2 பேரும்,  அமீரகத்தில் இருந்து வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  வைரஸ் பெருந்தொற்றுக்கு  சிகிச்சை பெற்ற ஆயிரத்து 842 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னையைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரில், கொரோனா பாதிப்பு, தொஏறுமுகமாக உள்ளது. கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி, உள்பட 14 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக  தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments