காதலியின் திருமணத்தை நிறுத்திய காதலனின் உணவகம் மற்றும் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்

0 24791

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலனின் உணவகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இலுப்பையூரணியைச் சேர்ந்த முத்துப்பிரகாஷ் தூத்துக்குடி புரோட்டா கடை என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அவரும் திட்டங்குளத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் விவகாரம் தெரியவந்து ராஜலட்சுமி வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ராஜலட்சுமிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையிடம் தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி முத்துப்பிரகாஷ் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், ஆட்களை ஏவி முத்துப்பிரகாஷின் ஓட்டலையும் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பயந்துபோன முத்துப்பிரகாஷ் தலைமறைவாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments