ஊரடங்கு அச்சத்தால் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற அச்சத்தில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு பயணமாகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்த போது, எல்லைகள் மூடப்பட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். அது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்று கருதி எல்லைகள் திறந்து இருக்கும் போதே வெளியேறி வருகின்றனர்.
நாசிக், புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலமான, மத்தியப் பிரசேதம், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்திற்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
Comments