இந்தியாவில் இதுவரை 8 கோடிக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: மத்திய நலவாழ்வு அமைச்சகம்
இந்தியாவில் இதுவரை 8 கோடிக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் ஜனவரி 16ஆம் நாள் தொடங்கியது. முதலில் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்துத் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பிற நோயுள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இன்று காலை 7 மணி வரை,7,91,05,163 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் மாலை நிலவரப்படி எட்டுக் கோடிக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments