அசாமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவானதால் தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

0 2560

அசாமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவானதால் தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனை அங்கு பணியில் இருந்தவர்களும் ஏற்றுள்ளனர்.

இந்த நிலையில் 90 வாக்குகளுக்குப் பதில் 171 வாக்குகள் பதிவானது தெரியவந்ததை அடுத்து, அங்கு தேர்தல் பணியில் இருந்த 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments