கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம், 140 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு

0 1142

கேரள மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக 6 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் 957 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.74 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அந்த மாநிலத்திலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள 9 தொகுதிகளில் மட்டும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments