திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 7681
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்கு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 5 பிரிவுகளின் கீழ் முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் திருச்சி தெற்கு தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற கே.என்.நேரு, கட்சியினருடன் பேசும் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக ஆபாசமாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், கே.என்.நேரு மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், சிறப்பு அனுமதியின்றி பொதுஇடத்தில் கூட்டம் நடத்துதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments